இந்தியா

குஜராத் தேர்தலில் தீவிரம் காட்டும் ஆம் ஆத்மி! கேஜரிவால் நாளை பயணம்

தில்லி, பஞ்சாபைத் தொடர்ந்து வரவுள்ள குஜராத் தேர்தலுக்காக ஆம் ஆத்மி வியூகங்களை வகுத்து வருகிறது. பாஜகவின் கோட்டையாக இருக்கும் இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி முனைப்புகாட்டி வருகிறது.

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நாளை குஜராத் செல்லவிருக்கிறார். 

தில்லி, பஞ்சாபைத் தொடர்ந்து வரவுள்ள குஜராத் தேர்தலுக்காக ஆம் ஆத்மி வியூகங்களை வகுத்து வருகிறது. பாஜகவின் கோட்டையாக இருக்கும் இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி முனைப்புகாட்டி வருகிறது.

இதையொட்டி, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் அடிக்கடி குஜராத்துக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். பொதுக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வரும் அவர், இலவச மின்சாரம், அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வருகிறார். 

இந்நிலையில், நாளை(புதன்கிழமை) அவர் குஜராத்தில் பலன்பூரில் உள்ள டவுன் ஹாலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசவுள்ளதாக குஜராத் ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் யோகேஷ் ஜத்வானி தெரிவித்துள்ளார். 

கடந்த 4 மாதங்களில் கேஜரிவால் குஜராத் செல்வது 10 ஆவது முறையாகும். முன்னதாக கடந்த சனிக்கிழமை அவர் குஜராத் சென்றிருந்தார். 

குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் வரவுள்ளதால் ஆம் ஆத்மி தீவிர பணியில் ஈடுபட்டுள்ளது. 

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல், ஆளும் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையிலான நேரடி போட்டியாக இருக்கும் என்று கேஜரிவால் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT