இந்தியா

‘நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க தயார்’: காங்கிரஸ்

DIN

நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக பிகார் சட்டப்பேரவையின் காங்கிரஸ் குழுத் தலைவர் அஜித் சர்மா தெரிவித்துள்ளார்.

பாஜக - ஜனதா தளம் இடையேயான கூட்டணியில் முறிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், பிகாரில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு முடிவு எட்டப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நிதிஷ் குமார் வந்தால் வரவேற்று நாங்கள் ஆதரவளிப்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் சர்மா பேட்டியளித்துள்ளார்.

மேலும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவெடுக்க மகாகத்பந்தன் கூட்டணியின் கூட்டம் கூடியுள்ளது. இந்த கூட்டம் முடிந்த பிறகு எங்களின் முடிவை அதிகாரப் பூர்வமாக தெரிவிப்போம் என்றார்.

இதற்கிடையே பாட்னாவில் உள்ள அலுவகத்தில் பாஜக தனது கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம், நிதிஷ் குமார், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் மகாகத்பந்தன் என்ற பெயரில் கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்து முதல்வராக நீடித்தார்.

இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. நிதிஷ் குமார் முதல்வரானார். தற்போது இந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு தனது பழைய நண்பர்களிடம் கைகுலுக்கத் திட்டமிட்டுள்ளார் நிதிஷ் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT