முகப்பு
இந்தியா

புதுவை பட்ஜெட் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது: திமுக வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கிய நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கிய நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30க்கு தொடங்கியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடக்க உரையாற்றினார். சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, சட்டப்பேரவை வந்தடைந்த துணைநிலை ஆளுநருக்கு, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. சட்டப்பேரவைத் தலைவர் துணைநிலை ஆளுநரை பூங்கொத்து வழங்கி வரவேற்றார். தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் துணைநிலை ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

புதுவையில் மின்துறை தனியார்மயம், தேர்தல் வாக்குறுதிகளை தேசிய ஜனதா கூட்டணி நிறைவேற்றவில்லை, பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை போன்ற காரணமாக வெளிநடப்பு செய்தனர்.

இந்த கூட்டத்தொடரில், பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி இன்னும் உறுதியாகவில்லை. ஆளுநர் உரை, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறும் தேதிகள் அலுவல் குழுக் கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments