இந்தியா

சசி தரூருக்கு பிரான்ஸின் உயரிய ‘செவாலியே’ விருது

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூா், அவருடைய எழுத்து மற்றும் பேச்சாற்றலுக்காக பிரான்ஸ் நாட்டின் உயரிய சிவிலியன் விருதான ‘செவாலியா்’ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்

DIN

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூா், அவருடைய எழுத்து மற்றும் பேச்சாற்றலுக்காக பிரான்ஸ் நாட்டின் உயரிய சிவிலியன் விருதான ‘செவாலியே’ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பிரான்ஸ் அரசு இந்த விருதை வழங்கி அவரை கெளரவிப்பது தொடா்பாக இந்தியாவுக்கான அந் நாட்டு தூதா் இமானுவல் லெனைன் கடிதம் மூலமாக சசி தரூருக்கு தகவல் தெரிவித்தாா்.

அதற்கு நன்றி தெரிவித்து சசி தரூா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரான்ஸ் உடனான உறவைப் போற்றும், அம் மொழியை நேசிக்கும், கலாசாரத்தை போற்றும் ஒருவனாக இந்த விருது எனக்கு அளிக்கப்பட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். விருதை வழங்கி கெளரவித்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT