ரூ.6000 கோடி முறைகேடு செய்த பாஜக எம்.பி. சென்னை விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
போலி நிறுவனங்கள் பெயரில் கோடிக்கணக்கில் ரூ.6000 கோடி அளவிற்கு முறைகேடு செய்த பாஜக எம்.பி. சென்னை விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னை: போலி நிறுவனங்கள் பெயரில் கோடிக்கணக்கில் ரூ.6000 கோடி அளவிற்கு முறைகேடு செய்த பாஜக எம்.பி. சென்னை விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஆந்திர மாநிலம் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் சத்திய நாராயணா செளவுத்ரி என்கின்ற ஒய்.எஸ்.செளவுத்ரி. இவர் தற்போது பா.ஜ.க.,வில் எம்.பி.,யாக உள்ளார்.
இவர் கடந்த 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சராக பதவி வகித்தார். இவர் தனது பதவி காலத்தில் பல்வேறு வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்று ஏமாற்றியதாக பல புகார்கள் எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
சுமார் 120-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சுஜானா குரூப் என்ற பெயரில் போலியாக துவங்கி சுமார் ரூ.6000 கோடி அளவிற்கு முறைக்கேடு செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு இவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. வங்கி கூட்டமைப்பிலிருந்து சுமார் ரூ.364 கோடி அளவிற்கு சுஜானா நிறுவனங்களின் பெயரில் கடன் பெற்று ஏமாற்றியது தெரியவந்துள்ளது
இதன் தொடர்ச்சியாக பல ஆவணங்கள் சிக்கியது. இது தொடர்பாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம். தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நிறுவனங்கள் என்ற பெயரில் விளம்பர பலகை மட்டுமே வைத்து மோசடியில் ஈடுப்பட்டது அம்பலமானது.
இதையும் படிக்க: ஆடி கடைவெள்ளி: பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
இதன் அடிப்படையில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஒய்.எஸ்.செளவுத்ரி இன்று காலை ஆஜரானார். வழக்கு விசாரணை செய்த நீதிபதி ஆகஸ்ட் 26 ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.