இந்தியா

மீண்டும் தலைக்காட்டுகிறதா கரோனா? 11 நாள்களில் 30 பேர் பலி!

IANS

கர்நாடகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பும் பலியும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 6 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், ஆகஸ்ட் முதல் 11 நாள்களில் மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த ஒரு நாளில் மாநிலத்தில் காரோனா தொற்றால் 1,691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக பெங்களூருவில் மட்டும் 1,225 பேருக்கு நோய்த் தொற்று பதிவாகியுள்ளன. 

அதிகரித்துவரும் கரோனா நோய்த் தொற்றுகளை சமாளிக்க, மாநில அரசு வெள்ளிக்கிழமை இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைத் தொடங்கியது. 

சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, 

ஏப்ரலில் 5, மே மாதத்தில் 6, ஜூன் மாதத்தில் 10 மற்றும் ஜூலையில் 29 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆகஸ்ட் முதல் 11 நாள்களில் 30 பேர் கரோனா காரணமாக இறந்துள்ளனர். 

மாநிலத்தில் கொடிய நோய்க்கு இதுவரை 40,134 பேர் பலியாகி உள்ளனர். இதன் நேர்மறை விகிதம் 6.09 சதவீதமாகவும், சிகிச்சையில் 10,054 பேரும் உள்ளனர். 

இந்த வாரம் கரோனாவுக்கு 20 வயது பெண் மற்றும் 60 வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கும் எந்தவிதமான நோய்களும் இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT