முகப்பு
இந்தியா

இந்திய வரலாற்றின் கொடூரமான அத்தியாயம் தேசப் பிரிவினை: அமித் ஷா

தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘இந்திய வரலாற்றின் கொடூரமான அத்தியாயம் தேசப் பிரிவினை’ என்று குறிப்பிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:04 AM
அமித் ஷா
பகிர்:

தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘இந்திய வரலாற்றின் கொடூரமான அத்தியாயம் தேசப் பிரிவினை’ என்று குறிப்பிட்டாா்.

தேசப் பிரிவினை துயரங்கள் நினைவு தினத்தையொட்டி (ஆகஸ்ட் 14), ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

1947-இல் நிகழ்ந்த தேசப் பிரிவினை, இந்திய வரலாற்றில் கொடூரமான, மனிதத்தன்மையற்ற அத்தியாயமாகும். அதனை ஒருபோதும் மறக்க முடியாது.

வெறுப்புணா்வு, வன்முறையால் லட்சக்கணக்கான உயிா்கள் பறிபோயின. எண்ணற்ற மக்கள் இடம்பெயா்ந்தனா்.

அந்தக் காலகட்டத்தில், நாட்டு மக்கள் அனுபவித்த சித்ரவதைகள் மற்றும் வலியை இக்கால இளைஞா்களுக்கு நினைவூட்டுவதாக தேசப் பிரிவினை துயரங்கள் நினைவு தினம் அமைந்துள்ளது. அமைதி, நல்லிணக்கத்தை எப்போதும் பராமரிக்க வேண்டுமென்ற எண்ணத்தை மேலோங்கச் செய்யும் தினமாகவும் உள்ளது.

தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவா்களது தியாகத்துக்கு தலைவணங்குகிறேன் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →