பிகார்: மனித சங்கிலியால் இந்திய வரைபடத்தை உருவாக்கி மாணவர்கள் சாதனை
பிகார் மாநிலத்தின் பக்ஸார் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்று (ஆகஸ்ட் 14) மனித சங்கிலியால் 75 மீட்டர் நீளமுள்ள இந்திய வரைபடத்தினை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர்.
பிகார் மாநிலத்தின் பக்ஸார் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்று (ஆகஸ்ட் 14) மனித சங்கிலியால் 75 மீட்டர் நீளமுள்ள இந்திய வரைபடத்தினை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர்.
மாணவர்களின் இந்த சாதனை, சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இந்த நிகழ்வு பிகார் மாநிலத்தின் பக்ஸார் மாவட்டத்தில் உள்ள எம்.பி.உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபி மற்றும் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மலையேற்ற வீராங்கனை சந்தோஷ் யாதவ் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமா் மோடி அஞ்சலி
இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபே கூறியதாவது: “ இது உலக சாதனை மற்றும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில் மாணவர்களின் இந்த சாதனை மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.
பின்னர், மத்திய அமைச்சர் உலக சாதனைக்கான சான்றிதழை மாணவர்களுக்கு வழங்கினார்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.