இந்தியா

மராத்தா இடஒதுக்கீடு ஆதரவாளா் வினாயக் மேட்டே சாலை விபத்தில் பலி

DIN

சிவ சங்கராம் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினருமான வினாயக் மேட்டே மும்பை-புணே விரைவுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டத்தை முன்னெடுத்தவா் வினாயக் மேட்டே. இவரது வாகனம் மும்பை-புணே விரைவுச்சாலையில் ராய்காட் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த வினாயக் மேட்டே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த வாகனத்தின் ஒட்டுநா் உள்ளிட்ட இருவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். வினாயக் மேட்டேவுக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனா்.

இவரது இறப்புக்கு மாநில அமைச்சா் சந்திரகாந்த பாட்டீல், தேசிய காங்கிரஸ் கட்சி தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT