இந்தியா

அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி

சுதந்திர நாளையொட்டி பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லையில், தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. 

DIN

சுதந்திர நாளையொட்டி பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லையில், தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. 

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வரும் கொடியிறக்கும் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

நாடு முழுவதும் இன்று உற்சாகமாக சுதந்திர நாள் கொண்டாடப்பட்டது. தில்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அவர் தொடர்ந்து 9வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.

அதேபோல அந்தந்த மாநிலங்களில் முதல்வர்கள் தேசியக் கொடியேற்றி உரையாற்றினர்.  மேலும் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம், அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பும், கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT