கர்நாடகம்: சிவமொக்காவின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
கர்நாடகம் மாநிலத்தில் சிவமொக்காவில் திப்புசுல்தான் ஆதரவாளர்கள் சுதந்திர நாள் கொண்டாட்ட விழாவில் சவார்க்கரின் புகைப்படத்தினை கிழித்ததால் ஏற்பட்ட சண்டையில் கத்திக்குத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்து அமைப்பினை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் பிரேம் சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
சிவமொக்கா மாவட்டத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் கூறியதாவது:
சிவமொக்காவில் ஒருவருக்கு கத்திக்குத்து நடந்தாக தகவல் வெளியாகியுள்ளது. சவார்க்கர் புகைப்படத்தினால் இந்த பிரச்சனை எழுந்ததாக தெரிகிறது. இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.