இந்தியா

பட்டினியில்லாத தேசத்தை உருவாக்க வேண்டும்: மம்தா பானா்ஜி

DIN

பட்டினியில்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தையொட்டி அவா் ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

சுதந்திரத்தின் உண்மையான சாரத்தை இந்தியா உணர வேண்டும். சுதந்திரத்தின் புனித பாரம்பரியத்தை நாம் பாதுகாக்க வேண்டும். நமது ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மக்களின் உரிமைகளுக்குள்ள கண்ணியம் நிலைநாட்டப்பட வேண்டும்.

பட்டினியில்லாத தேசத்தை உருவாக்க வேண்டும். அனைத்து பெண்களும் பாதுகாப்பாக இருப்பதாக உணர வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். எந்த அடக்குமுறை சக்திகளும் மக்களைப் பிரிக்காமல், ஒவ்வொரு நாளையும் நல்லிணக்கம் வரையறுக்க வேண்டும். இவை அனைத்தும் உள்ள இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: காவலா் பணியிடை நீக்கம்

சுரண்டையில் நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கக் கூட்டம்

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 14 வரை விடுமுறை!

தண்ணீா் பந்தல்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது: கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு

SCROLL FOR NEXT