இந்தியா

இமாச்சலில் தரமான, இலவசக் கல்வி: ஆம் ஆத்மி வாக்குறுதி

இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில்  ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு தரமான, இலவசக் கல்வி வழங்கப்படும் என்று புதன்கிழமை வாக்குறுதி அளித்துள்ளது. 

PTI

இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில்  ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு தரமான, இலவசக் கல்வி வழங்கப்படும் என்று புதன்கிழமை வாக்குறுதி அளித்துள்ளது. 

அனைத்துப் பள்ளிகளும் தில்லியைப் போல் சிறந்ததாக மாற்றப்படும், தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படாது, தற்காலிக ஆசிரியர்கள் முறைப்படுத்தப்படும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும், மேலும் அவர்களுக்கு ஆசிரியர் அல்லாத இதர பணிகள் வழங்கப்படாது என்ற ஐந்து உத்தரவாதங்களை ஆம் ஆத்மி கட்சி அளித்துள்ளது. 

சிம்லாவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் சார்பில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டனர்.

தேர்தல் மூலம் மாநில அரசியல் களத்தில் களமிறங்க முயற்சிக்கும் ஆம் ஆத்மி கட்சி, தற்போது அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் தில்லியில் ஆட்சி செய்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சந்தீப் பதக் மற்றும் இமாச்சல் பிரிவு தலைவர் சுர்ஜித் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

தண்டவாளத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு: பெண் உள்பட 4 போ் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

SCROLL FOR NEXT