இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து ஒன்றரை மாதத்திற்குள் இதுவரை 205 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7 பேர் மாயமாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் சுதேஷ் குமார் மோக்தா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஜூன் 29 முதல் சேதமடைந்த சாலைகள், நீர் வழித்தடங்கள் மற்றும் மின்சாரம் என மாநிலத்திற்கு மொத்தம் ரூ.1,014.08 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூன் 29 முதல் ஆகஸ்ட் 16 வரை ஏற்பட்ட 35 விபத்துகளில் குறைந்தது 103 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மரம் மற்றும் பாறைகள் விழுந்ததில் 33 பேர் பலியாகினர்.
பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட 6 சம்பவங்களில் 25 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். 48 நிலச்சரிவுகளில் 7 பேர் இறந்துள்ளனர். மேலும் திடீர் வெள்ளத்தால் மூன்று பேர் உயிரிழந்தனர் என்றார்.
தவிர, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் 120 விலங்குகள் உயிரிழந்துள்ளன, 95 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன, 335 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று மோக்தா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.