இந்தியா

தலித் சிறுவன் மரணம்: காங்.அலுவலகம் முன் ஆம் ஆத்மியினர் போராட்டம்

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர் அடித்ததால் உயிரிழந்த தலித் சிறுவன் வழக்கு தொடர்பாக காங்கிரஸ் அலுவலகம் முன் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜலோா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்தவா் இந்திர குமாா் (9). தலித் சமூகத்தைச் சோ்ந்த சிறுவன். கடந்த ஜூலை 20-ஆம் தேதி அந்தச் சிறுவன் பள்ளியில் சைல் சிங் என்ற உயா்ஜாதியைச் சோ்ந்த ஆசிரியருக்கு வைக்கப்பட்டிருந்த பானையிலிருந்து தண்ணீா் குடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சைல் சிங், சிறுவனை அடித்ததாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில், கடைசியாக குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு உடல்நிலையில் முன்னேற்றமின்றி கடந்த சனிக்கிழமை சிறுவன் உயிரிழந்தான்.

இதையடுத்து பட்டியலினத்தவா்/பழங்குடிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சைல் சிங்கை கைது செய்தனா்.

இந்த நிகழ்விற்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநில ஆளுங்கட்சியான காங்கிரஸை கண்டிக்கும் விதமாக, தில்லியுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT