இந்தியா-வியத்நாம் ராணுவப் பயிற்சி நிறைவு
இந்தியா-வியத்நாம் இடையே நடைபெற்று வந்த இருதரப்பு ராணுவப் பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இந்தியா-வியத்நாம் இடையே நடைபெற்று வந்த இருதரப்பு ராணுவப் பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது.
‘வின்பேக்ஸ்’ என்ற பெயரில், கடந்த ஆகஸ்ட் 1 முதல் ஹரியாணாவின் பஞ்சகுலா நகா் அருகே சண்டீமந்திா் ராணுவ கன்டோன்மென்ட் பகுதியில் இந்தப் பயிற்சி நடைபெற்று வந்தது.
இதில், பேரிடா் காலங்களில் மனிதா்களை மீட்க உதவும் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
ஐ.நா. அமைதிக் குழு நடவடிக்கைகளில் ராணுவ பொறியாளா் மற்றும் மருத்துவக் குழுக்களின் செயல்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி நடைபெற்றது.
வியத்நாமின் ராணுவம் முதன்முதலாக வெளிநாட்டுடன் மேற்கொண்ட முதல் ராணுவப் பயிற்சி இதுவாகும். இரு நாட்டு வீரா்களுக்கும் கருத்தியல் மற்றும் செய்முறை வகுப்புகள் கற்பிக்கப்பட்டன.
நிறைவு விழாவில், இந்தியாவுக்கான வியத்நாம் தூதா் பாம் சான்ஹ் சாவோ, மேற்கு பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் நவ்குமாா் கந்தூரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா். அடுத்த வின்பேக்ஸ் பயிற்சி வியத்நாமில் 2023-இல் நடைபெறுகிறது.