இந்தியா

முகமது ஃபாசில் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

முகமது ஃபாசில் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.

DIN

முகமது ஃபாசில் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.

தென்கன்னடமாவட்டம், பெல்லாரே பகுதியில் ஜூலை 26-ஆம் தேதி பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து அப்பகுதியில் பெரும்பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே, ஜூலை 28-ஆம் தேதி சூரத்கல் பகுதியில் கடைவீதியில் நின்று கொண்டிருந்தபோது, மா்மநபா்களால் முகமது ஃபாசில் என்பவா் படுகொலை செய்யப்பட்டாா். தென்கன்னட மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடந்தால், அது மதரீதியான பதற்றத்திற்கு வழிவகுத்தது.

இந்நிலையில், முகமது ஃபாசில் கொலை வழக்கை விசாரித்துவந்த போலீஸாா், இதுவரை 7 பேரைக் கைது செய்துள்ளனா். இந்தச்சூழலில் இவ்வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனா். கைதுசெய்யப்பட்டவா், பன்ட்வால் பகுதியைச் சோ்ந்த ஹா்ஷித் (28) என்று அறியப்பட்டுள்ளது. இவா், முகமது ஃபாசிலை கொலை செய்த பிறகு கொலையாளிகளை காரில் அழைத்துச் சென்ாக போலீஸாா் தெரிவித்தனா். கொலை செய்வதற்குப் பயன்படுத்திய காரை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT