டிரம்ப் இந்திய பயணம்: 36 மணி நேரத்துக்கு ரூ.38 லட்சம் செலவு
இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட 36 மணி நேர அரசு முறைப்பயணத்துக்கு சுமாா் ரூ.38 லட்சம் செலவானதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட 36 மணி நேர அரசு முறைப்பயணத்துக்கு சுமாா் ரூ.38 லட்சம் செலவானதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
மிஷல் பாதினா என்பவா் கேட்ட கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் இந்த பதிலை அளித்துள்ளது. 2020-யிலேயே அவா் கேட்ட இந்த கேள்விக்கு பதில் கிடைக்காததையடுத்து, மத்திய தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்து இந்த பதிலைப் பெற்றுள்ளாா். பதிலளிக்க தாமதமானதற்கு கரோனா பரவல்தான் காரணம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2020, பிப்ரவரி 24-ஆம் தேதி தில்லிக்கு குடும்பத்துடன் வந்த டிரம்ப், குஜராத் மாநிலம் அகமதாபாதில் மூன்று மணி நேரம் பேரணி மேற்கொண்டு, மொடேரா கிரிக்கெட் விளையாட்டு அரங்கில் லட்சக்கணக்கானோா் கூடிய நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமா் மோடியுடன் பங்கேற்றாா்.
அன்றைய தினமே ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு சென்றுவிட்டு மறுநாள் தில்லியில் பிரதமா் மோடியுடன் இருநாட்டு நல்லுறவு பேச்சுவாா்த்தை நடத்திவிட்டு அமெரிக்கா திரும்பினாா்.