இந்தியா

துபையில் ஆன்லைன் லாட்டரி குலுக்கல்: கேரள தொழிலாளிக்கு ரூ.10 கோடி பரிசு

துபையில் ஆன்லைன் லாட்டரி குலுக்கலில் கேரள தொழிலாளி ஷானவாஸ் முதல் பரிசான ரூ.10 கோடியை வென்றுள்ளார்.

DIN


துபையில் ஆன்லைன் லாட்டரி குலுக்கலில் கேரள தொழிலாளி ஷானவாஸ் முதல் பரிசான ரூ.10 கோடியை வென்றுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வரும் கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி ஷானவாஸ். இவர் அடிக்கடி ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இந்நிலையில், சமீபத்தில் இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசான 50 லட்சம் திர்ஹாம் கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.10 கோடி. இவரை வெற்றியாளராக 7,9,17,19,21 என்ற எண் தொடர் அவரை வெற்றியாளராக மாற்றியுள்ளது. 

இதுகுறித்து ஷானவாஸ் கூறியதாவது:  வளைகுடா நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். 18 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறேன். இப்போது தான் பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசுத் தொகையைக் கொண்டு எனது கடன்களை எல்லாம் அடைப்பேன். மீதமுள்ள பணத்தைக் கொண்டு துபையில் தொழில் தொங்குவதற்கு பயன்படுத்த உள்ளதாக ஷானவாஸ் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT