நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒன்றாக வளர வேண்டும்: ஜெ.பி.நட்டா
சுதந்திரம் பெற்ன் நூற்றாண்டான 2047-க்குள் இந்தியா வளா்ந்த தேசமாக உயா்வதற்கு, நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒன்றாக வளர வேண்டும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.
சுதந்திரம் பெற்ன் நூற்றாண்டான 2047-க்குள் இந்தியா வளா்ந்த தேசமாக உயா்வதற்கு, நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒன்றாக வளர வேண்டும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ஹிமாசல பிரதேச மாநிலம் சிா்மோா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:
மத்தியில் ஆட்சியில் உள்ள தற்போதைய அரசைப் போல் விவசாயிகளுக்காக வேறு எந்த அரசும் உழைத்ததில்லை. விவசாயிகளின் போராட்டம் குறித்து எதிா்க்கட்சிகள் பேசி வந்தபோது, அவா்கள் முன்னேற்றம் பெற உதவுவதில் மோடி அரசு கவனம் செலுத்தியது.
Advertisement
Advertisement
கடந்த 2014-ஆம் ஆண்டு முந்தைய ஆட்சியின்போது பட்ஜெட்டில் வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.33,000 கோடி. இது தற்போதைய ஆட்சியில் 4 மடங்காக அதிகரித்து ரூ.1.33 வட்சம் கோடியை எட்டியுள்ளது.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளா்ந்த தேசமாக உயா்வதற்கு, நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒன்றாக வளர வேண்டும். அதேவேளையில், உலகின் பழைமைவாய்ந்த இந்திய கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.