கோப்புப்படம் 
இந்தியா

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 2 காவலர்கள் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவலர்கள் முகாம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 காவலர்கள் பலியாகியுள்ளனர். 

DIN

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவலர்கள் முகாம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 காவலர்கள் பலியாகியுள்ளனர். 

வெள்ளிக்கிழமை பஜூரில் உள்ள டமா டோலா காவல் நிலையத்திற்கு அருகே அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இந்த சம்பவத்தில் 2 காவலர்கள் கொல்லப்பட்டனர். 

உயிரிழந்த காவலர்கள் ஹவால்தார் சையத் அகமது மற்றும் இனயதூர் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டனர். 

குற்றவாளிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் மஹ்மூத் கான், குண்டுவெடிப்பில் இரண்டு காவலர்கள் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார்: நாராயணசாமி

கோவை - பெங்களூரு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

பீனிக்ஸ் ஏஞ்சல்... மம்தா!

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரதமர் மோடி வாழ்த்து

ஒளி அவள்... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT