உ.பி.: கார் 30 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 2 பேர் பலி, மூவர் காயம்
உத்தரப் பிரதேசத்தின் தில்லி-லக்னௌ தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று 30 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் தில்லி-லக்னௌ தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று 30 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மிர்கஞ்ச் மேம்பாலத்தில் தண்ணீர் நிரம்பிய 30 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது.
இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மிர்கஞ்ச காவல் அதிகாரி சதீஷ் குமார் கூறினார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,
லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் முகமதி கிராமத்தைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் தில்லிக்குச் சென்றுகொண்டிருந்தபோது கார் பள்ளத்தாக்கில் விழுந்து உள்ளே சிக்கிக்கொண்டது.
சுமார் 2 மணி நேர முயற்சிக்குப் பிறகு, அவர்களில் ஒருவர் வெளியே வந்து, போலீசாருக்குத் தகவல் அளித்து, சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியைத் தொடங்கினார்.
காரில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர், ஆனால் அதற்குள் சலீம் (40), அமீர் (28) ஆகியோர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் பரேலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.