முகப்பு
இந்தியா

விவசாய நிலத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானப் படையின் ஹெலிகாப்டர்

ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய நிலத்தில் திடீரென்று விமானப் படையின் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Updated On : 23 ஆகஸ்ட், 2022 at 2:40 PM
பகிர்:

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய நிலத்தில் திடீரென்று இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஹனுமன்கர் மாவட்டத்திற்கு அருகேவுள்ள கிராமத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்த விமானப் படைக்கு சொந்தமான ‘மி-35’ ரக ஹெலிகாப்டர் திடீரென அவசரமாக விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்டது. இதனைக் கண்ட கிராம மக்கள் சிறிது பதற்றம் அடைந்தனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், ஹெலிகாப்டரில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கான விரிவான காரணம் குறித்து விசாரணைக்கு பின் விமானப் படை தரப்பில் அறிக்கை வெளியிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.