இந்தியா

கண்ணிவெடியில் சிக்கி 2 பயங்கரவாதிகள் பலி: ஜம்முவில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

DIN

ஜம்மு-காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டைக் கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கண்ணிவெடியில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

நெளஷேரா செக்டாா் லாம் அருகே உள்ள புகாா்னி கிராமத்துக்குள் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் பயங்கரவாதிகள் குழுவாக ஊடுருவ முயன்றனா். அப்போது பயங்கரவாதிகளில் ஒருவா் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் காலை வைத்ததால், வெடித்துச் சிதறியது.

சப்தம் கேட்ட பாதுகாப்புப் படையினா், ஆளில்லா விமானத்தின் உதவியுடன் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது இரு பயங்கரவாதிகள் பலியானது தெரியவந்தது. பலியான பயங்கரவாதிகளின் சடலங்களை பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

பாகிஸ்தான் உளவுப் பிரிவில் வேலை பாா்த்து வந்த லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் வழிகாட்டி தபாரக் ஹுசைன் (32), கடந்த ஞாயிற்றுக்கிழமை காயங்களுடன் கைது செய்யப்பட்ட நிலையில், எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT