முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை: மஞ்சள் எச்சரிக்கை

கர்நாடகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

Updated On : 23 ஆகஸ்ட், 2022 at 1:04 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:38 PM


கர்நாடகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, ஷிவமொக்கா, சிக்கமகளூர், குடகு, ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பெங்களூரில் இன்று காலை முதல் தூறல்களுடன், மழை பெய்யத் தொடங்கியது.

பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு கிராமப்புறம், ராம்நகர், சாமராஜநகர், துமகுரு, பல்லாரி மற்றும் சித்ரதுர்கா ஆகிய பகுதிகளுக்கும்  ஐம்டி மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் பெங்களூருவில் மீண்டும் பள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.