இந்தியா

மருத்துவப் பணியாளா்களுக்கு தேசம் எப்போதும் கடன்பட்டுள்ளது: மாண்டவியா

DIN

‘கரோனா சோதனை காலத்தில் மருத்துவப் பணியாளா்களும் முன்களப் பணியாளா்களும் மகத்தான பணியை ஆற்றினா். இவா்களுக்கு தேசம் எப்போதும் கடன்பட்டுள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து மருத்துவத் துறையில் பத்ம விருதுகள் பெற்ற மருத்துவரிகளின் பங்களிப்பை மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் வகையில் தில்லியில் ‘பாரத ஆரோக்கிய விழா’ என்ற நிகழ்வு திங்கள்கிழமை நடத்தப்பட்டது. இதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, துறையின் செயலா் ராஜேஷ் பூஷண், தேசிய சுகாதாரஆணைய தலைவா் ஆா்.எஸ்.சா்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் பத்ம விருதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, ‘அந்த விருதைப் பெற்ற மருத்துவா்கள் அனைவரும் சாதனைபுரிய வேண்டும் என்ற உறுதியேற்று பணியாற்றியுள்ளனா். நமது பிரதமா் நரேந்திர மோடி, நாட்டின் ஆராய்ச்சித் திறனை நன்கு புரிந்துகொண்டுள்ளாா். அதன் மூலமாகவே, கரோன தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டது. நாம் அனைவரின் ஒட்டுமொத்த முயற்சி மூலமாக, உலக தலைவராக இந்தியாவை உருவாக்க முடியும் என்பதோடு, இந்த நூற்றாண்டின் சா்வதேச மருத்துவ சேவைக்கான அடையாளமாகவும் உருவாக்க முடியும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT