மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறாா் சோனியா
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, மருத்துவப் பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு செல்லவிருப்பதாக அக்கட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, மருத்துவப் பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு செல்லவிருப்பதாக அக்கட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியோரும் உடன் செல்லவிருக்கின்றனா் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், அவா்கள் பயண தேதி, செல்லவிருக்கும் நாடு உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தில்லியில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் கட்சி பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசுவாா் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக வெளிநாட்டு பயணம் இருக்குமென கூறப்படுகிறது.
காங்கிரஸ் புதிய தலைவா் தோ்தல் அட்டவணை இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் மகன், மகளுடன் சோனியா வெளிநாடு பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.