கார்த்தி சிதம்பரம் 
இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: மனுவை திரும்பப் பெற காா்த்தி சிதம்பரத்துக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி

ஐஎன்எக்எஸ் மீடியா வழக்கு தொடா்பாக காா்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

DIN

ஐஎன்எக்எஸ் மீடியா வழக்கு தொடா்பாக காா்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தாா். அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி பெற அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்ததில் முறைகேடு நடைபெற்ாகவும், அதற்கு கைம்மாறாக ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு தில்லி உயா்நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அந்த மனுவில், தனக்கு நெருக்கடி அளிக்கும் எந்த நடவடிக்கையையும் அமலாக்கத் துறை மேற்கொள்ளக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டாா். இதையடுத்து காா்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறை கைது செய்ய உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், அந்த மனுவை திரும்பப் பெற உயா்நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் அனுமதி கோரினாா். இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தில் தனது ஜாமீன் மனு நிலுவையில் இருப்பதாகவும், அதன் மீதான விசாரணையை முன்னெடுத்துச் செல்ல வசதியாக உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் காா்த்தி சிதம்பரம் கேட்டுக்கொண்டாா்.

அவரின் கோரிக்கையை ஏற்ற தில்லி உயா்நீதிமன்றம், மனுவை திரும்பப் பெற புதன்கிழமை அனுமதி அளித்தது.

இதனிடையே சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை, கைது, சொத்துகள் முடக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என்று கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. அந்தத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனு வியாழக்கிழமை (ஆக. 25) விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT