இந்தியா

மனிதர்களைப் போன்று நீராடும் எலி (விடியோ)

மனிதர்களைக் கண்டால் அஞ்சி ஒளிந்துகொள்ளும் எலிக்கூட்டம், மனிதர்களைப் போன்று கூட்டமாக நீராடும் விடியோ இணையத்தில் பரலால் பகிரப்பட்டு வருகிறது.

DIN

மனிதர்களைக் கண்டால் அஞ்சி மறைந்துகொள்ளும் எலிக்கூட்டம், மனிதர்களைப் போன்று கூட்டமாக நீராடும் விடியோ இணையத்தில் பரலால் பகிரப்பட்டு வருகிறது.

இதில், வெள்ளை எலி ஒன்று மனிதர்களைப் போன்று உடல், முகம், கை, கால்களை நன்கு தேய்த்துக் குளிக்கிறது. இதனால், இந்த விடியோ வைரலாகி வருகிறது. 

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய், பூனை போன்றவை மனிதர்களுடன் வளர்வதால், மனிதர்களைப் போன்ற குணாதிசயங்களுடன் நடந்துகொள்வது இயல்பானது.

ஆனால், மனிதர்களைக் கண்டால் ஓடி ஒளிந்துகொள்ளும் எலி, குளிக்கும்போது மனிதர்களைப் போன்று நன்கு உடலைத் தேய்த்து குளிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் கை, கால், முகம் என தனித்தனியாக தேய்த்து குளிப்பது மனிதர்கள் குளிப்பதைப் போன்று இருப்பதாக பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

கருப்பு எலிகள் கூட்டமாக குளித்துக்கொண்டிருக்க, வெள்ளை நிற எலி கரையில் நின்றபடி கை, முகம், கால்களைத் தேய்த்துக் குளிப்பது பலரைக் கவர்ந்துள்ளது.

இதனை அப்பகுதியிலிருந்த ஒருவர் விடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

இந்த எலி கடந்த பிறவியில் மனிதனாக பிறந்திருக்கும் என்றும், எலி சோப்பு கேட்கப்போகிறது எனவும் பலர் விடியோவில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT