ஹேமந்த் சோரன் 
இந்தியா

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம்?

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

DIN

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்து வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த ஹேமந்த் சோரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஹேமந்த சோரன் தனது பெயரிலேயே நிலக்கரி சுரங்கத்தை குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான புகாரில் ஹேமந்த் சோரனை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம்  பரிந்துரை செய்துள்ளது.

தேர்தல் ஆணைய பரிந்துரை மூலம் ஹேமந்த் சோரனின் சட்டமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்படுகிறது. ஜார்க்கண்ட்  மாநில ஆளுநருக்கு தனது பரிந்துரையை  தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.

தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 0.88 ஏக்கா் பரப்பு கல்குவாரியை தன் பெயரில் குத்தகைக்கு எடுத்ததாக அந்த மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் மீது ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான ரகுபா்தாஸ் குற்றஞ்சாட்டினாா். அதுதொடா்பான ஆவணங்களையும் அவா் வெளியிட்டிருந்தாா்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.


ஹேமந்த் சோரன் பதவி விலகி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT