நரேந்திர மோடி 
இந்தியா

கர்நாடகத்தில் சாலை விபத்து: உயிரிழந்த குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார் மோடி

கர்நாடகத்தில் துமகுரு மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

DIN

புது தில்லி: கர்நாடகத்தில் துமகுரு மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டிவிட்டரில், 

கர்நாடகத்தின் துமகுரு மாவட்டத்தில் நடந்த விபத்து இதயத்தை உலுக்குகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனைகள். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிதியிலிருந்து வழங்கப்படும். 

காயமடைந்தவர்கள் துமகுரு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அங்கு 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

கர்நாடகம் மாநிலம் துமகுரு மாவட்டம் சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 3 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT