இந்தியா

கொலைகார கும்பல் போல நடந்து கொள்ளும் பாஜக: மணீஷ் சிசோடியா

மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்காக மத்தியில் ஆளும் பாஜக கொலைகார கும்பல் போல செயல்படுவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

DIN

மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்காக மத்தியில் ஆளும் பாஜக கொலைகார கும்பல் போல செயல்படுவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்குகள் முற்றிலும் போலியானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவையில் மணீஷ் சிசோடியா பேசியதாவது: “ தில்லி அரசின் கலால் திட்டத்தில் எந்த ஒரு ஊழலும் இல்லை. இந்த கலால் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை நிரூபிக்க சிபிஐ தரப்பில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. உலகம் முழுவதும் பாராட்டப்படும் தில்லி அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த சிபிஐ சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மற்றவர்கள் செய்யும் நல்ல செயல்களைப் பார்த்து பிரதமர் பாதுகாப்பின்றி உணர்கிறார். அவரைவிட பாதுகாப்பின்றி உணரும் ஒருவரை நான் பார்த்ததில்லை.

பிரதமர் அறிமுகப்படுத்தும் நல்ல திட்டங்களை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வரவேற்கிறார். ஆனால். பிரதமரோ தில்லி அரசினால் கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராகவே உள்ளார். சிபிஐ நடத்திய 14 மணி நேர சோதனையில் என்னுடைய உடைகள் மற்றும் என்னுடைய குழந்தைகளின் உடைகளும் ஆராயப்பட்டன. ஆனால், அவர்களுக்கு அதிலிருந்து ஒன்றும் கிடைக்கவில்லை. பாஜக மற்ற மாநில அரசுகளை கவிழ்ப்பதில் கொலைகார கும்பல் போல செயல்பட்டு வருகிறது. அவர்கள் மாநில அரசுகளை திட்டமிட்டு கொல்ல நினைக்கும் திட்டத்தினை கைவிட்டு பள்ளி மற்றும் மருத்துவமனைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினால் நன்றாக இருக்கும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT