பிரியாவிடை பெற்ற என்.வி. ரமணா 
இந்தியா

பிரியாவிடை பெற்ற என்.வி. ரமணா: கண்ணீர் விட்ட துஷ்யந்த் தாவே

உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெற்றார். அவருக்கு பிரியாவிடை அளித்தபோது, மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தாவே கண்ணீர் விட்டு அழுதார்.

DIN

புது தில்லி: உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெற்றார். அவருக்கு பிரியாவிடை அளித்தபோது, மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தாவே கண்ணீர் விட்டு அழுதார்.

சட்டம் இயற்றும் நாடாளுமன்றம், அதனை செயல்படுத்தும் நீதிமன்றம் என நீதித்துறையை அவர் மிகச் சிறப்பாக நிமிர்ந்து நின்று சமநிலை காத்தார். 

குடிமக்களுக்கான நீதிபதி என்று துஷ்யந்த் தாவே, ரமணாவைக் குறிப்பிட, மற்றொரு மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், மிக இக்கட்டான காலக்கட்டத்தில் கூட, இவர் சமநிலை காத்ததை, இந்த நீதிமன்றம் எப்போதும் நினைவில் கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் இருக்கும் குடிமக்களின் சார்பாக நான் இங்கே பேசுகிறேன், நீங்கள் அவர்களுக்காக நின்றிருக்கிறீர்கள். அவர்களது உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் நீதிபதியாக பொறுப்பேற்ற போது எனக்கு, நீதிமன்றம் எப்படி நடக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், இங்கே நான் சொல்லியே ஆக வேண்டும், நீங்கள் எங்களுடைய எதிர்பார்ப்புகளை எல்லாம் விஞ்சிவிட்டீர்கள் என்று துஷ்யந்த் தாவே குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT