இந்தியா

அன்னை தெரசாவின் பிறந்தநாள்: நினைவிடத்தில் பிரார்த்தனை

PTI


கொல்கத்தா: அன்னை தெரசாவின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு, கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசாவின் அறக்கட்டளை மற்றும் அமைப்புகளில் சிறப்பு வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.

கொல்கத்தாவில் உள்ள அன்னை இல்லத்தில், அன்னை தெரசாவின் நினைவிடத்தின் முன்பு, ஏராளமான கன்னியாஸ்திரிகள் பாடல்களைப்பாடி சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பேராயர் தாமஸ் டிசோசா கூறுகையில், அன்னை தெரசா குறித்து போப் பிரான்சிஸ் இவ்வாறு குறிப்பிட்டார், அதாவது ஆறுகள் தனது நதிநீரை குடிப்பதில்லை, மரங்கள் தங்களது கனிகளை உண்பதில்லை, சூரியன் தனக்கே வெளிச்சம் கொடுப்பதில்லை, பூக்கள் தங்களுக்கு மட்டும் நறுமணத்தை வீசுவதில்லை, மற்றவர்களுக்காக வாழ்வதே இயற்கையின் நியதி. அதுபோலவே வாழ்ந்தவர் அன்னை தெரசா. ஏழைகளைக் காக்கவும், ஏழை மக்களின் வாழ்க்கை உயர வேண்டும் என்றே அவர் வாழ்ந்தார் என்று கூறியிருந்ததை இன்று அவர்  நினைவுகூர்ந்தனர்.

ஸ்பெயினிலிருந்து வந்திருக்கும் ஜேம்ஸ் பேசுகையில், அன்னை தெரசாவின் பிறந்தநாளை இங்குக் கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சி. எனது குழந்தைப் பருவம் முதல் அவரை பின்பற்றி வருகிறேன் என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT