வங்கிப் பெட்டகத்தை நாளை ஆய்வு செய்யவிருக்கும் சிபிஐ: மணீஷ் சிசோடியா 
இந்தியா

வங்கிப் பெட்டகத்தை நாளை ஆய்வு செய்யவிருக்கும் சிபிஐ: மணீஷ் சிசோடியா

சிபிஐ அதிகாரிகள் நாளை, எனது வங்கிப் பெட்டகத்தை ஆய்வு செய்யவிருக்கிறார்கள்  என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

PTI

புது தில்லி: சிபிஐ அதிகாரிகள் நாளை, எனது வங்கிப் பெட்டகத்தை ஆய்வு செய்யவிருக்கிறார்கள் என்றும், ஆனால் அதில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்றும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ள சிபிஐ, சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31  இடங்களில் சோதனையும் நடத்தியிருந்தது.

இந்த நிலையில், நாளை, சிபிஐ அதிகாரிகள், எங்களது வங்கிப் பெட்டகங்களைத் திறந்து அதில் என்ன இருக்கிறது என்று ஆய்வு செய்யவிருக்கிறார்கள். கடந்த 19ஆம் தேதி எனது வீட்டில் 14 மணி நேரம் நடைபெற்ற மிக நீண்ட தேடுதலில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நாளை வங்கிப் பெட்டகத்திலும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. சிபிஐ அதிகாரிகளை வரவேற்கிறேன்.

நானும் எனது குடும்பமும் இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று துணை முதல்வர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT