ஒடிசா மாநிலத்தின் 30 மாவட்டங்களிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பூங்காக்களை(எம்எஸ்எம்இ) அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலர் மொகபத்ரா கூறுகையில்,
நிலம், மின்சாரம் மற்றும் நீர் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு ஆதரவையும் குறு சிறு, நடுத்தர தொழில் பூங்காக்கள் பெரும் என்று அவர் கூறினார்.
ஒடிசா தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மாவட்டங்களில் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று ஒடிசா சட்டப்பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட புரோபேக் ஒடிசாவின் நிறைவுக் கூட்டத்தில் அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் வங்கிகளால் வழங்கப்படும் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான நிதியில் 30-40 சதவீதம் வளர்ச்சியைக் கண்டோம். இதுதொடர்பாக வங்கியாளர்களுடன் முதல்வர் நவீன் பட்நாயக் இரண்டு சுற்றுச் சந்திப்புகளை நடத்தியுள்ளார். வங்கிகள் ஒத்துழைக்கவில்லை எனத் தொழில்முனைவோர் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த மொஹபத்ரா கூறினார்.
இதுகுறித்து ஒடிசா தொழில்துறை அமைச்சர் பி.கே.தேப் கூறுகையில்,
இளைய தலைமுறையினர் சவால்களை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அரசியின் ஆதரவை மட்டும் நம்பியிருக்கக் கூடாது. தொழில்களுக்கான சிறந்த உள்கட்டமைப்பை ஒடிசா பெற்றுள்ளது. ஒடிசாவிற்கு பெரிய மற்றும் கனரக தொழிற்சாலைகள் வருகிறது, ஆனால் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மாநிலத்திற்கு மிகவும் அவசியம். தொழில் அமைப்புகள் முன்வந்து சிறந்த தொழில் மயமாக்கலுக்கான கொள்கை மாற்றத்தைப் பரிந்துரைக்க வேண்டும் என்றார்.
மாநில நிதிச் செயலர் விஷால் தேவ், இந்த துறை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக இருப்பதால், குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கு நிதி கிடைப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளைக் கேட்டுக் கொண்டார். ஆண்டு இறுதிக்குள் அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் வர்த்தக தள்ளுபடி தளங்களில் சேர்ப்பது எங்கள் திட்டம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.