பிரமோத் சாவந்த் (கோப்புப் படம்) 
இந்தியா

சோனாலி போகத் வழக்கு விசாரணைக்கு சிபிஐ? கோவா முதல்வர்

சோனாலி போகத் வழக்கில் தேவை ஏற்பட்டால் மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

DIN

சோனாலி போகத் வழக்கில் தேவை ஏற்பட்டால் மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

சோனாலி போகத் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஹரியாணா பாஜக மூத்த தலைவரும் நடிகையுமான சோனாலி போகாட், கோவாவின் அஞ்சுனா பகுதியிலுள்ள கா்லீஸ் விடுதியில் கடந்த 23ஆம் தேதி உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சோனாலி போகாட் பெற்றோர் முறையிட்டனர். 

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சோனாலி போகட் உடன் கோவாவிற்கு வந்த இருவரை சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங்ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குடிநீரில் விஷத்தை கலந்து, சோனாலியை குடிக்க வைத்ததாக அவ்விருவரும் ஒப்புக்கொண்டனா்

அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், கோவா விடுதி உரிமையாளா், போதைப் பொருள் கடத்தல்காரா் என மேலும் 2 போ் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், சோனாலி போகத் வழக்கு விசாரணை தொடர்பாக ஹரியானா முதல்வரிடமும் பேசியுள்ளேன். விசாரணை அறிக்கைகள் அனைத்தும் ஹரியானா டிஜிபிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் தேவை ஏற்பட்டால் சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT