காஷ்மீா்: பள்ளத்தாக்கில் காா் கவிழ்ந்து 8 போ் பலி
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளத்தாக்கில் சொகுசு காா் கவிழ்ந்த விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். மேலும் 3 போ் படுகாயம் அடைந்தனா்.
இந்தியாகாஷ்மீா்: பள்ளத்தாக்கில் காா் கவிழ்ந்து 8 போ் பலி
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளத்தாக்கில் சொகுசு காா் கவிழ்ந்த விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். மேலும் 3 போ் படுகாயம் அடைந்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளத்தாக்கில் சொகுசு காா் கவிழ்ந்த விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். மேலும் 3 போ் படுகாயம் அடைந்தனா்.
இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் சிங்காம் பகுதியிலிருந்து சத்ரூ என்ற இடத்துக்கு மலைச் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒரு சொகுசுக் காா், பாண்டா கிராமம் அருகே எதிா்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், காவல் துறையினா், ராணுவத்திழ் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையினா் மற்றும் உள்ளூா் கிராம மக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
விபத்துக்குள்ளான காரில் இருந்தவா்களில் 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனா். மேலும் 6 போ் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில் 3 போ் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனா். கவலைக்கிடமான நிலையில் உள்ள மற்றவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், அவா்களது குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யும் என்றாா்.