பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா 
இந்தியா

அசாம்: 4,700 கிலோ கஞ்சா பறிமுதல்

அசாமில் ரூ. 15 கோடி மதிப்பிலான கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

DIN

அசாமில் ரூ. 15 கோடி மதிப்பிலான கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச் பகுதியில் லாரி ஒன்றை சோதனை செய்தபோது ரப்பர் தாள்களுக்குக் கீழே 4,728 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின், உடனடியாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.

அண்டை மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட இந்த கஞ்சாவின் மதிப்பு  ரூ. 15 கோடி. 

மேலும், கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை. இச்சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச டி20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ‘திடீர்’ ஓய்வு!

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

உயரும் யமுனை நீா் மட்டம்: கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT