இந்தியா

'நீதி கிடைக்குமா? சிபிஐ விசாரணை தேவை': சோனாலி போகாட் மகள் உருக்கம்

DIN

நடிகை சோனாலி போகாட் கொலை வழக்கில் திருப்தியில்லை என அவரின் மகள் யசோதரா போகாட் தெரிவித்துள்ளார். 

ஹரியானா முதல்வரும் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை என்றும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

ஹரியாணா பாஜக மூத்த தலைவரும் நடிகையுமான சோனாலி போகாட், கோவாவின் அஞ்சுனா பகுதியிலுள்ள கா்லீஸ் விடுதியில் கடந்த 23ஆம் தேதி உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சோனாலி போகாட் பெற்றோர் முறையிட்டனர். 

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சோனாலி போகாட் உடன் கோவாவிற்கு சென்ற சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குடிநீரில் விஷத்தை கலந்து, சோனாலியை குடிக்க வைத்ததாக அவ்விருவரும் ஒப்புக்கொண்டனா்

அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், கோவா விடுதி உரிமையாளா், போதைப் பொருள் கடத்தல்காரா் என மேலும் 2 போ் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய சோனாலி போகாட்டின் மகள் யசோதரா போகாட், என் தாய் மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை தேவை. தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் நம்பிக்கை ஏற்படவில்லை. ஹரியானா முதல்வரும் இது குறித்து பேசுகிறார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT