இந்தியா

25 ஆண்டுகள் கழித்து சந்தித்த தாய்-மகன்: மொழித்தடையால் பேசமுடியாத சோகம்!

DIN


கேரளத்தில் ஒரு வயதில் மகனைப் பிரிந்த தாய், 25 ஆண்டுகள் கழித்து சந்தித்த சம்பவம் கேரளத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவர் வேலை நிமித்தமாக 30 ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்திற்கு சென்றுள்ளார். அங்கு தங்கி வேலை பார்த்து வந்தபோது குஜராத்தைச் சேர்ந்த ராம் பாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

ஓராண்டு கழித்து அவர்களுக்கு மகன் பிறந்ததும், கேரளத்திற்கு குடும்பத்துடன் திரும்பியுள்ளார். மகனுக்கு கோவிந்த் என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார். இதனிடையே இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தபோது, மகனை அழைத்துக்கொண்டு சென்ற கணவர் ராம் பாய் மீண்டும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. 

குஜராத்திற்கு மகனுடன் சென்ற ராம் பாய், தனது மாநிலத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால், மனமுடைந்த கீதா, மகனைப் பிரிந்து வாடியுள்ளார். சில ஆண்டுகள் மகனைத் தேடி அலைந்த அவர், தற்போது ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஒரு வயதில் தந்தையுடன் தாயைப் பிரிந்து சென்ற மகன், 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் தாயைத் தேடி வந்துள்ளார். தனது உறவினரின் மூலம் தாய் குறித்த தகவல்களை அறிந்துகொண்ட அவர், கோட்டயம் கருக்காச்சல் எல்லை காவல் நிலையத்தை அடைந்துள்ளார். 

பஞ்சாயத்து தலைவர் மூலம் காவல் நிலையத்திலிருந்து கீதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காவல் நிலையத்தில் தனது மகன் கிடைத்ததும் நெகிழ்ச்சியுற்று அழுதார். எனினும் கோவிந்துக்கு குஜராத்தி, ஹிந்தி மொழி மட்டுமே தெரிந்ததால், மலையாளம் மட்டுமே தெரிந்த தாயால் தனது வார்த்தைகளை வெளிப்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து பேசிய தாய் கீதா,  வீடு சம்பந்தப்பட்ட பணத்தை கொடுப்பதற்காக பஞ்சாயத்து தலைவர் அழைப்பதாக நினைத்த நான், காவல் நிலையத்தில் என் மகன் கிடைப்பான் என நினைக்கவில்லை. இறப்பதற்கு முன்பு மகனை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என நாள்தோறும் வேண்டிக்கொள்வேன். என் மகன் ஓணம் பண்டிகைக்காக எனக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன் என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT