இந்தியா

செப். 1, 2: கேரளம், கர்நாடகத்தில் மோடி சுற்றுப்பயணம்!

IANS

பிரதமர் மோடி செப்டம்பர் 1-2 தேதிகளில் கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள மோடி பல்வேறு திட்டங்களை அம்மாநிலத்தில் செயல்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கேரளத்தின் கொச்சியில் உள்ள ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் இயக்குகிறார். 

பின்னர், கர்நாடகத்திற்குச் செல்லும் அவர், மங்களூருவில் சுமார் 3,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 

அதன்பின்னர், துறைமுகம் மூலம் மேற்கொள்ளப்படும் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னணி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயா்வு

படகுகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

வெற்றியுடன் நிறைவு செய்தது லக்னௌ

சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

மருத்துவப் பல்கலை. நாள்தோறும் மருத்துவப் பரிசோதனை வசதி

SCROLL FOR NEXT