சீமா பத்ரா - கைது செய்து அழைத்துச்செல்லப்படும் சீமா பத்ரா 
இந்தியா

சிறுநீரைக் குடிக்கவைத்த பாஜக தலைவர்: 12 நாள்கள் போலீஸ் காவல்

ஜார்கண்ட்டில் வீட்டில் பணிபுரிந்துவந்த பணிப்பெண்ணை சிறுநீர் குடிக்கவைத்து கொடுமைப்படுத்திய பாஜக தலைவர் சுனிதா பத்ராவிற்கு 12 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DIN

ஜார்கண்ட்டில் வீட்டில் பணிபுரிந்துவந்த பணிப்பெண்ணை சிறுநீர் குடிக்கவைத்து கொடுமைப்படுத்திய பாஜக தலைவர் சுனிதா பத்ராவிற்கு 12 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியும் பாஜக தலைவருமான சீமா பத்ரா, வீட்டில் பணிபுரிந்த பெண்ணை இழிவாக நடத்தியுள்ளார். 

சீமா பத்ரா வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியினத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். 29 வயதாகும் அவர், சீமா பத்ரா வீட்டை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டுவந்துள்ளார். 

இந்நிலையில், வீட்டில் பணிபுரிந்து வந்த சுனிதாவை, கடுமையாக அடித்ததுடன், உடலில் காயம் ஏற்படும் அளவிற்கு தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சிறுநீரைக் குடிக்க வற்புறுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார். 

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சீமா பத்ரா வீட்டில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுனிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், சீமாவை ஜார்கண்ட் மாநில காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை செப்டம்பர் 12ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். 

கட்சியிலிருந்து நீக்கம்:

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் கைது செய்ததால், சீமா பத்ராவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் குணால் சாரங்கி அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி, பிரிட்டன் பயணம் ரூ.15,516 கோடி அந்நிய முதலீடுகளை ஈர்த்திருப்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

இறைச்சித்தம் வழங்கிய தலைமைக் கொடை!

நம்பிக்கை கொடுக்கிறது!

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு முழு தடை விதிக்க கோரிக்கை

SCROLL FOR NEXT