மோடி அரசினால் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: சந்திரசேகர் ராவ் 
இந்தியா

மோடி அரசினால் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: சந்திரசேகர் ராவ்

மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளினால் அனைத்து துறைகளும் வீழ்ச்சியை சந்தித்துவருவதாக தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளினால் அனைத்து துறைகளும் வீழ்ச்சியை சந்தித்துவருவதாக தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பங்கேற்றார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர் ராவ், “மோடி ஆட்சிக்கு முந்தைய காலத்தில் ரூபாய் மதிப்பு இந்தளவு வீழ்ந்ததில்லை. மோடி அரசுக்கு எதிராக ஆண்டு முழுவதும் விவசாயிகள் ஏன் போராடினார்கள்? ஒவ்வொரு துறையிலும் நாடு மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆட்சியில் உள்ள பாஜக அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழித்து விடுவோம் எனத் தெரிவிப்பது அவமானகரமானது” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், “நிதீஷ் குமார் நாட்டின் மூத்த அரசியல் தலைவர். நாங்கள் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.                          

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT