இந்தியா

இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளி தொடக்கம்: வீட்டிலிருந்தே படிக்கலாம்!

DIN

நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று தொடங்கி வைத்தார்.

பள்ளிக்கு வர இயலாத, தொலைதூரங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஏதுவாக மெய்நிகர் பள்ளி திட்டத்தை தில்லி அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது:

இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளியை இன்று தொடங்கியுள்ளோம். தில்லி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் தில்லி மாதிரி மெய்நிகர் பள்ளியில் இன்று முதல் 9ஆம் வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கபட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பகுதியில் இருந்தும் மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்றுக் கொள்ளலாம்.

மெய்நிகர் பள்ளியில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் நேரடி வகுப்புகளை கவனிக்கவும், அதை பதிவு செய்து கொள்ளவும் முடியும். மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப்படும். நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கும் உதவி செய்யப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT