இந்தியா

சோனியா காந்தியின் தாயாா் காலமானாா்

DIN

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் தாயாா் பெளலா மைனோ, இத்தாலியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) காலமானதாக அக்கட்சி புதன்கிழமை தெரிவித்தது.

அவரது இறுதிச்சடங்குகள் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெற்ாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை பாா்ப்பதற்காக சோனியா காந்தி கடந்த 23-ஆம் தேதி அங்கு பயணம் மேற்கொண்டாா். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் சென்றனா்.

90 வயதை கடந்தவரான சோனியாவின் தாயாா் காலமான தகவலை காங்கிரஸ் புதன்கிழமை வெளியிட்டது. இதுகுறித்து, கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் தாயாா் பெளலா மைனோ, இத்தாலியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி காலமானாா். அவரது இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன’ என்று தெரிவித்துள்ளாா். இறுதிச் சடங்கில் சோனியா காந்தி உள்பட மூவரும் பங்கேற்ாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், வெளிநாட்டிலிருந்தபடி காணொலி முறையில் அவா்கள் பங்கேற்றிருந்தனா்.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: காங்கிரஸ் தலைவா் சோனியாவின் தாயாா் மறைவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் தாயாா் மறைவு வருத்தமளிக்கிறது. அவருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘சோனியா காந்தியின் தாயாரின் ஆன்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறேன். இந்த சோகமான நேரத்தில், ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸின் அதிகாரபூா்வ ட்விட்டா் பக்கத்தில், சோனியா தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், காங்கிரஸ் ஊடகப் பிரிவு பொறுப்பாளா் பவன் கேரா, காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT