முகப்பு
இந்தியா

திருப்பதியில் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று சுவாமி தரிசனம் செய்தார். 

Updated On : 5 டிசம்பர், 2022 at 6:34 PM
திருப்பதியில் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்
பகிர்:

திருமலை: ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று சுவாமி தரிசனம் செய்தார். 

அரசு முறைப் பயணமாக ஆந்திரம் சென்றிருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று காலை திருப்பதி திருமலை சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு, அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி குடியரசுத் தலைவரை வரவேற்று வராக சுவாமி மற்றும் ஏழுமலையானை தரிசனம் செய்ய வைத்து பிரசாதங்களை வழங்கினார்.

நாட்டின் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதல் முறையாக திருப்பதி வந்திருக்கும் குடியரசுத் தலைவருக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தரிசனங்களை முடித்துக் கொண்டு கிளம்பிய குடியரசுத் தலைவருக்கு, கோயிலின் சார்பில், கோயில் புத்தகம் மற்றும் கோயில் சார்பில் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கால நாள்காட்டி, நாள்குறிப்பு ஆகியவையும் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.