இந்தியா

தில்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி!

தில்லி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 126 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

DIN

தில்லி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 126 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 250 வாா்டுகளுக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் 42 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே இழுபறி நீடித்து வந்தது. ஆனால், கடைசி சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய ஆம் ஆத்மி கட்சி வெற்றிக்கு தேவையான 126 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.

பகல் 2 மணி நிலவரப்படி:

வெற்றி

ஆம் ஆத்மி 126
பாஜக 97
காங்கிரஸ் 7
சுயேட்சை 3

முன்னிலை

ஆம் ஆத்மி 8
பாஜக 6
காங்கிரஸ் 3

இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு தில்லி மாநகராட்சியை ஆம் ஆத்மியிடம் பாஜக இழந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT