சோனியா - ராகுல் 
இந்தியா

ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுலுடன் இணையும் சோனியா!

ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுலுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இணைய உள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

DIN

ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுலுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இணைய உள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

சோனியா வியாழக்கிழமை காலை ஜெய்ப்பூர் வந்துள்ளார். அவர் ஹெலிகாப்டரில் பூண்டிக்கு வர திட்டமிடப்பட்டுள்ளார். அங்கு அவரது மகனும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தியுடன் இன்றைய நடைப்பயணத்தில் இணைய உள்ளார். 

இதைத்தொடர்ந்து ராகுலுடன் 24 கி.மீ அணிவகுத்துச் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சோனியா காந்தியின் பிறந்த நாளான டிசம்பர் 9-ம் தேதி இந்த நடைப்பயணத்துக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. டிசம்பர் 10-ம் தேதி முதல் நடைப்பயணம் மீண்டும் தொடங்கும்.

டிச.5-ம் தேதி ராஜஸ்தானின், ஜலவார் மாவட்டத்திலிருந்து தனது ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கினார்  ராகுல் காந்தி. 

ராஜஸ்தான், ஜலவார், கோட்டா, பூண்டி, சவாய் மாதோபூர், தௌசா மற்றும் அல்வார் மாவட்டங்கள் வழியாக சுமார் 500 கி.மீ தூரத்தை 17 நாள்களுக்குள் கடந்து டிசம்பர் 21-ம் தேதியன்று ஹரியாணாவுக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT