சபரிமலை 
இந்தியா

சபரிமலை: 24 நாளில் ரூ.125 கோடி வருவாய்

சபரிமலை கோயிலுக்கு கடந்த 24 நாளில் ரூ.125 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்வம் போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார். 

DIN

சபரிமலை கோயிலுக்கு கடந்த 24 நாளில் ரூ.125 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்வம் போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆன்லைன் முன்பதிவு முறையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1.20 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நேரடியாக வரும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சபரிமலை கோயிலுக்கு கடந்த 24 நாளில் ரூ.125 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்வம் போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, உண்டியல் காணிக்கை, அப்பம், அரவணை பிரசாத விற்பனை மூலம் ரூ.125 கோடி கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் அரவணை பிரசாதம் தேவஸ்வம்போர்டு சார்பில் சொந்தமாக தயாரிக்கப்படும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த டின்களில் அரவணை பிரசாதம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT